வேலைவாய்ப்பு.. லாக்டவுனால் அதிகம் பாதிக்கப்பட்டது இளைஞர்களும், பெண்களும்தான் | Statistics show that Lockdown has largely affected young, women jobs

Jobs

oi-Veerakumar

Google Oneindia Tamil News

டெல்லி: லாக்டவுன் அதிகப்படியாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் வேலைவாய்ப்புகளில்தான் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறது புள்ளி விவரம்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அடிப்படையில், நிறைய விஷயங்களை அவதானிக்க முடிகிறது. கடந்த ஏப்ரல் மாதம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

Statistics show that Lockdown has largely affected young, women jobs

2020ம் ஆண்டு ஏப்ரலில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதுதான் நாட்டின் முதல் மிகப்பெரிய முழு லாக்டவுன் காலகட்டம் என்பது கவனிக்கத்தக்கது.

167,112 பதிவுகள் ஏப்ரலில் நடந்துள்ளன. 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிட்டால், இது வெறும் 15.5 சதவீதம் மட்டுமேயாகும்.

சராசரி மாத பதிவுகள் 2017 செப்டம்பர் வரை 1.26 மில்லியனாக இருந்தது. பின்னர், செப்டம்பர் முதல் 2018 ஆகஸ்ட் காலகட்டத்தில் 1.05 மில்லியனாகக் குறைந்தது. அடுத்த ஆறு மாதங்களில், அதாவது 2019 செப்டம்பர் முதல் 2020 பிப்ரவரி வரை, சராசரியான புதிய பதிவு 0.85 மில்லியனாக குறைந்தது.

முல்லைப்பெரியாறு அணை...வெள்ளப்பெருக்கு...மக்களுக்கு இடுக்கி மாவட்டக் கலெக்டர் எச்சரிக்கை!! முல்லைப்பெரியாறு அணை…வெள்ளப்பெருக்கு…மக்களுக்கு இடுக்கி மாவட்டக் கலெக்டர் எச்சரிக்கை!!

2020 மார்ச் மாத இறுதியில் லாக்டவுன் அறிமுகமானது. அப்போது ஓரளவு வேலைவாய்ப்பு பதிவில் பாதிப்பு ஏற்பட்டது. வெறும் 0.4 மில்லியனாக அப்போது பதிவு இருந்தது. ஏப்ரல் மாதத்தில் அது 0.17 மில்லியனாக சரிந்தது. மே மாதத்தில் சற்று நிலைமை மேம்பட்டது. ஏனெனில், 0.28 மில்லியன் தொழிலாளர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

வயது அடிப்படையில் பார்த்தால், 21 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள நபர்களை பணிக்கு அமர்த்துவது, 2017 செப்டம்பர் முதல் 2018 ஆகஸ்ட் வரை மொத்த தொழிலாளர் பதிவு விகிதத்தில் 24.7 சதவீதமாக இருந்தது. அடுத்த ஆண்டில் 26.6 சதவீதமாகவும் பின்னர் 2020ம் ஆண்டு பிப்ரவரியில் 27.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

ஆனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் லாக்டவுன் நடைமுறையில் இருந்தபோது, இளைஞர்களின் பங்கு கிட்டத்தட்ட 22.2 சதவீதமாகக் குறைந்தது.
லாக்டவுனுக்கு முந்தைய காலகட்டத்தில் 38 முதல் 39 சதவிகித பதிவு கொண்ட 22 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களின் பங்கு, 2020ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் 33.4 சதவீதமாகக் குறைந்தது.

லாக்டவுன் அனைத்து வயதினருக்கும் வேலைவாய்ப்பை குறைத்த நிலையில், இது 29 வயதிற்குக் குறைவான இளைஞர்களின் வேலைவாய்ப்பை மிக அதிகம் குறைத்துள்ளது. அதே போல லாக்டவுன், ஆண்களை பாதித்ததை விட பெண்களை அதிகம் பாதித்துள்ளது.

பெண்கள் மற்றும் ஆண்கள் இடையேயான தொழிலாளர் வைப்பு நிதி பதிவுகளின் விகிதம் 2017ம் ஆண்டு செப்டம்பர் காலகட்டத்தில் 4.2 ஆக இருந்தது, இரண்டாம் காலாண்டில் 3.6 ஆக இருந்தது, 2019 செப்டம்பர் முதல் முதல் பிப்ரவரி 2020 வரை ஆறு மாதங்களில் 3.5 ஆக இருந்தது.
2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் பூட்டுதல் மாதங்களில், விகிதம் 3.9 ஆக இருந்தது. இந்த சரிவு 21 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள பெண்களிடம் அதிகம்.

English summary

Statistics show that Lockdown has largely affected the employment of young men and women in India.

Source link

Leave a Comment